கத்தி முனையில் மிரட்டி பணம் பறித்த 2 பேர் கைது

பெரம்பூர்: அயனாவரம் பேருந்து நிலையம் அருகே டிபன் கடை நடத்தி வருபவர் ராஜி (51). இவர் நேற்று காலை வழக்கம் போல் வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது 2 பேர், ராஜியிடம் வந்து பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளனர். அதற்கு ராஜி, ‘‘பணம் தர முடியாது’’ என்று கூறியதாக தெரிகிறது. இதனால் அவர்கள் கத்தியை காட்டி மிரட்டி ராஜியிடம் இருந்து ஆயிரம் ரூபாயை பறித்து தப்பினர்.

இதுகுறித்து ராஜி கொடுத்த புகாரின்படி, அயனாவரம் போலீசார் வழக்குபதிவு செய்து சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில், அயனாவரம் பி.இ கோயில் தெருவை சேர்ந்த ஆகாஷ் (19), அயனாவரம் பெரியார் சாலை ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்த கார்த்திகேயன் (எ) வட கார்த்திக் (20) ஆகியோர் பணம் பறித்தது தெரிந்தது. அவர்களை கைது செய்தனர்.

Related Stories: