×

கிரீமி சிக்கன் பாஸ்தா

செய்முறை

முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து அதில் ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து பாஸ்தாவை வேகவைத்து தனியே எடுத்து வைக்கவும்.
மற்றொரு கடாயில் வெண்ணெய் சேர்த்து உருகியதும், கோதுமை மாவு சேர்த்து கட்டி இல்லாமல் கலந்து பிறகு பால் சேர்த்து கொதித்து வரும் போது சீஸைதுருவி, உப்பு, மிளகுத்தூள் சேர்த்து கொதிக்க வைத்தால் வைட் சாஸ் தயார். மற்றொரு கடாயில் எண்ணெய் சேர்த்து வெங்காயம், கார்ன், சிக்கன், மஷ்ரூம் எல்லாம் சேர்த்து நன்கு வதக்கி அதில் வேகவைத்துள்ள பாஸ்தா சேர்த்து கிளறி கடைசியாக சாஸ் சேர்த்து பரிமாறவும்.

Tags :
× RELATED பனை ஓலை கைவினைப் பொருட்களில் வருமானம் பார்க்கலாம்!