கடை பூட்டை உடைத்து ரூ.1 லட்சம் கொள்ளை

துரைப்பாக்கம்: பனையூர் ராஜிவ்காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் சரவணன் (42). அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்ததும் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார். நேற்று காலையில் வழக்கம் போல கடையை திறக்க வந்தார். அப்போது கடையின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.

அதிர்ச்சியடைந்த அவர் கடையின் உள்ளே சென்று பார்த்தார். அப்போது, அரிசி, பருப்பு முதலான உணவுப்பொருட்கள் ஆங்காங்கே சிதறி கிடந்தன.  கல்லாபெட்டி உடைக்கப்பட்டு, அதில் வைத்திருந்த ரூ.1 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. மேலும், சாக்லேட் மற்றும் ஊட்டசத்து பொருட்கள் ஆகியவை திருடு போய் இருந்தன.  இதுகுறித்து, அவர் கானத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: