ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 3,750 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்: ஒருவர் கைது

அம்பத்தூர்: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து சிலர் ரேஷன் அரிசியை ஆந்திர மாநிலத்திற்கு கடத்துவதாக வந்த புகாரின் பேரில், குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் நேற்று முன்தினம் பல்வேறு பகுதிகளில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது, ஆவடி கர்லப்பாக்கம் கருநீகர் தெருவில் உள்ள காலி மனையில், சந்தேகத்திற்கிடமான வகையில் நின்றிருந்த மினி வேனை, குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் குற்றப்புலனாய்வு பிரிவு காவல் ஆய்வாளர் சசிகலா மற்றும் போலீசார் சோதனை செய்தனர்.

அப்போது, அந்த வேனில் மூட்டை மூட்டையாக 3,750 கிலோ ரேஷன் அரிசி இருந்தது. அதை பறிமுதல் செய்தனர். அந்த வேனில் இருந்தவரை பிடித்து பட்டரைவாக்கம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில் ஆவடியை சேர்ந்த நந்தீஸ்வரன் (25) என்பதும், இவர் ரேஷன் அரிசியை ஆந்திராவுக்கு கடத்திச்சென்று அதிக விலைக்கு விற்க முயன்றது தெரியவந்தது. அவரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.

Related Stories: