வாலிபருக்கு கத்திக்குத்து: 8 பேருக்கு வலை

பெரம்பூர்: வியாசர்பாடி காமராஜ் நகர் 3வது தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன் (32). பாடி பகுதியில் உள்ள பிரபல தனியார் கம்பெனியில் டெலிவரி ஏஜென்ட்டாக உள்ளார். இவர், நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு நண்பர் வினோத்துடன் பெரம்பூர்- மாதவரம் நெடுஞ்சாலையில் உள்ள ஒரு கடையில் டீ குடித்துக் கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியில் நடைபெற்ற ஒரு கோயில் திருவிழாவிற்கு வந்திருந்த 8க்கும் மேற்பட்டோர், வெங்கடேசனிடம் தகராறில் ஈடுபட்டு, மறைத்து வைத்திருந்த கத்தியால் வெங்கடேசனின் தலை, காது மற்றும் பின்பக்க தலை உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக குத்தினர். இதில் படுகாயமடைந்த வெங்கடேசன் மயங்கி விழுந்தார்.

அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின்படி, செம்பியம் போலீசார் வழக்குபதிவு செய்து, சம்பவம் இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Related Stories: