வாலிபர் கைது

உத்திரமேரூர்: உத்திரமேரூர் அடுத்த குப்பையநல்லூர் பகுதியில் உத்திரமேரூர் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகத்தின் பேரில் சுற்றித்திரிந்த அப்பகுதியை சேர்ந்த விக்னேஷ் என்ற வாலிபரை மடக்கி பிடித்து விசாரணை செய்தனர். அப்போது அவர் அப்பகுதி புதர் ஒன்றில் கஞ்சாவினை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து, பதுக்கி வைத்திருந்த கஞ்சாவினை பறிமுதல் செய்த போலீசார் விக்னேஷை கைது செய்தனர்.

Related Stories: