ஒன்றிய அரசை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

செய்யூர்: செய்யூர் அருகே விலைவாசி உயர்த்திய ஒன்றிய பாஜவை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் கட்சியனர், கவன ஈர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். செய்யூர் வட்டம் இடைக்கழிநாடு பேரூராட்சிக்கு உட்பட்ட எல்லையம்மன் கோயில் பகுதியில் செங்கல்பட்டு தெற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் கட்சியின் சார்பில் அரிசி, பருப்பு, பால் உள்ளிட்டவைகளுக்கு ஜி.எஸ்.டி. வரியை உயர்த்தியதோடு காஸ் சிலிண்டர் விலையை உயர்த்திய ஒன்றிய பா.ஜ அரசின் விலைவாசி உயர்வை கண்டித்து நேற்று கவன ஈர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு செங்கல்பட்டு தெற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் பிரதாப் தலைமை தாங்கினார். பொறுப்பாளர்கள் வினோத், செந்தில், தமிழரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக இளைஞர் காங்கிரஸ் மாநில செயலாளர் சுனிர் சுந்தர்  கலந்துகொண்டார். இதில்,  ஒன்றிய பாஜ அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பினார். கட்சி நிர்வாகிகள் யாசர் அராபத், பாலா, நாகமுத்து, ரமேஷ், அருள்முருகன், எட்டியப்பன், காளியப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: