சொல்லிட்டாங்க...

மின்சார சட்டத்திருத்தம் மிகவும் ஆபத்தானது. இதை அமல்படுத்துவதில் ஒன்றிய அரசு தீவிரம் காட்டக்கூடாது. - டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்

பாஜவின் ஆட்டத்தையும், கொட்டத்தையும் அடக்கும் பூமியாக தமிழகம் உள்ளது. அம்பானி, அதானிகளுக்காக மோடி ஆட்சி நடத்துகிறார். - மதிமுக பொதுச்செயலாளர் வைகோ

விடுதலை போராட்டத்தில் காங்கிரசின் பங்கை எவரும் மூடி மறைத்திட முடியாது. ஆனால், தேசிய கொடியின் மீது பாஜவுக்கு திடீர் பற்று ஏற்பட்டுள்ளது. - தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி

அதிமுக என்பது மக்களால் உருவாக்கப்பட்ட கட்சி. மற்றவர்களால் இதை உடைக்கவும், அழிக்கவும் முடியாது. - முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி

Related Stories: