ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி

பூந்தமல்லி: சென்னை வளசரவாக்கம், ஆற்காடு சாலையில் உள்ள கடம்பாடி அம்மன் நகர் பிரதான சாலையில் ஒரு தனியார் வங்கியுடன் இணைந்த கட்டிடத்தில் ஏடிஎம் மையம் செயல்படுகிறது. இந்நிலையில், நேற்றுமுன்தினம் நள்ளிரவு தனியார் வங்கி ஏடிஎம் மையத்தில் 2 மர்ம நபர்கள் உள்ளே புகுந்தனர். பின்னர் அங்கிருந்த மெஷினை உடைத்து, அதில் இருந்த பணத்தை கொள்ளையடிக்க முயன்றனர். இதனால் வங்கி ஏடிஎம் மையத்தில் இருந்த அலாரம் ஒலிக்கத் துவங்கியதால், பணம் கொள்ளை முயற்சியை கைவிட்டு 2 மர்ம நபர்களும் தப்பிச் சென்றனர்.

இதனால் ஏடிஎம் மெஷினில் இருந்த ₹5 லட்சம் ரொக்கப் பணம் கொள்ளை போகாமல் தப்பியதாக கூறப்படுகிறது. தகவலறிந்ததும் வளசரவாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, 2 மர்ம நபர்களின் கைரேகை மற்றும் தடயங்களை சேகரித்தனர். இப்புகாரின்பேரில் வளசரவாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதி சிசிடிவி காமிரா பதிவுகள் மூலம் 2 மர்ம நபர்களையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Stories: