இந்தியாவுக்கு தொடரும் பதக்க மழை!: காமன்வெல்த் ஆடவர் பேட்மிண்டன் போட்டியில் தங்கம் வென்றார் இந்திய வீரர் லக்‌ஷயா சென்.!!

பர்மிங்காம்: இங்கிலாந்தில் நடைபெறும் காமன்வெல்த் போட்டியில் ஆடவர் பேட்மிண்டன் பிரிவில் இந்திய வீரர் லக் ஷயா சென் தங்கம் வென்றார். 72 நாடுகள் இடையிலான காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காமில் நடந்து வருகிறது. இன்றுடன் போட்டிகள் நிறைவு பெறக்கூடிய சூழலில் இந்திய வீரர், வீராங்கனைகள் கணிசமான பதக்கங்களை அறுவடை செய்து ரசிகர்களை பரவசத்தில் ஆழ்த்தி வருகின்றனர். அந்த வகையில் தற்போது இந்திய வீரர் லக் ஷயா சென் தங்கம் வென்று அசத்தியுள்ளார்.

ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் மலேசிய வீரர் சே யங்கை 19-21, 21-9, 21-16 என்ற செட் கணக்கில் லக் ஷயா சென் வீழ்த்தினார். காமன்வெல்த் போட்டியில் இந்தியா 20 தங்கம், 15 வெள்ளி, 22 வெண்கலம் உள்பட 57 பதக்கங்களுடன் பதக்க பட்டியலில்  4வது இடத்தில் உள்ளது. மகளிர் ஒற்றையர் பிரிவில் பி.வி.சிந்து தங்கம் வென்ற நிலையில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் லக் ஷயா சென் தங்கம் வென்று அசத்தியுள்ளார். இதன் மூலம் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவுக்கு 2வது தங்கம் கிடைத்துள்ளது.

Related Stories: