புதிய மின்சார சட்ட திருத்த மசோதா விவசாயிகளை பாதிக்கும் வகையில் எதுவும் இல்லை: ஒன்றிய மின்துறை அமைச்சர் ஆர்.கே.சிங் விளக்கம்

டெல்லி: புதிய மின்சார சட்ட திருத்த மசோதா விவசாயிகளை பாதிக்கும் வகையில் எதுவும் இல்லை என ஒன்றிய மின்துறை அமைச்சர் ஆர்.கே.சிங் தெரிவித்தார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 18-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் இன்று நாடாளுமன்றத்தில் மின்சார சட்ட திருத்த மசோதாவை மின்துறை அமைச்சர் ஆர்.கே. சிங் தாக்கல் செய்தார்.

ஒன்றிய அரசின் மின்சார சட்ட திருத்த மசோதா என்பது, மின் விநியோகத்தை தனியாருக்கு தாரை வார்ப்பது, மின்சார ஒழுங்குமுறை ஆணையங்களுக்கு அதிக அதிகாரம், அதிகபட்ச மின் கட்டணம் நிர்ணயம் என பல அம்சங்களைக் கொண்டது என கூறி எதிர்க்கட்சிகள் மற்றும் பல மாநில அரசுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி தமிழ்நாடு முழுவதும் மின்சாரத்துறை ஊழியர்களும் பணி முடக்கு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில், ஒன்றிய மின்துறை அமைச்சர் ஆர்.கே.சிங் இந்த மசோதா தொடர்பாக விளக்கம் அளித்துள்ளார். அதாவது, புதிய மின்சார சட்ட திருத்த மசோதா விவசாயிகளை பாதிக்கும் வகையில் எதுவும் இல்லை. மின்சார சட்டத்திருத்த மசோதா மக்களுக்கு ஆதரவாகவும், நமது பொருளாதாரத்தின் வளர்ச்சிக்காகவும் உள்ளது என கூறியுள்ளார்.

நுகர்வோருக்கு அரசு மானியம், இலவச மின்சாரத்தை தொடர்ந்து வழங்கலாம். மின்சார மசோதாவை எதிர்க்கட்சிகள் படிக்கவில்லை; மசோதாவில் விவாயிகள் தொடர்பான விதிகள் இல்லை. மேலும் விவசாயிகள் பெரும் மானியங்கள் தொடர்ந்து கிடைக்கும்; மாநில அரசு மானியத்தை அதிகரிக்கலாம் எனவும் ஒன்றிய மின்துறை அமைச்சர் ஆர்.கே.சிங் விளக்கம் அளித்துள்ளார்.

Related Stories: