தண்டையார்பேட்டையில் பழிக்கு பழியாக வாலிபருக்கு சரமாரி வெட்டு: 11 பேர் கைது

தண்டையார்பேட்டை: தண்டையார்பேட்டையில் ஒரு கொலை சம்பவத்தில் தொடர்புடைய வாலிபரை நேற்று மாலை 11 பேர் கொண்ட மர்ம கும்பல் கத்தியால் சரமாரி வெட்டியது. இதில் அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். போலீசார் வழக்குப்பதிவு செய்து 11 பேரை கைது செய்து விசாரிக்கின்றனர்.சென்னை தண்டையார்பேட்டை, திலகர் நகரில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் பாபா பார்த்தி (எ) பார்த்திபன் (32). கூலி தொழிலாளி. இவர் நேற்று மாலை வீட்டின் அருகே நின்றிருந்தார். அப்போது அவரை 11 பேர் கும்பல் கத்தியுடன் விரட்டியது. அவரை சுற்றி வளைத்த கும்பல் சரமாரி வெட்டிவிட்டு தப்பி சென்றது. படுகாயம் அடைந்த பார்த்திபன் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்துள்ளார்.

ஜீப்பில் ரோந்து பணியில் ஈடுபட்ட இன்ஸ்பெக்டர் சங்கரநாராயணன் தலைமையிலான போலீசார், பார்த்திபனை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் பார்த்திபன் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.போலீசார் விசாரணையில், கடந்த 6 மாதங்களுக்கு முன் இங்கு சீனா (எ) சீனிவாசன் என்ற 17 வயது சிறுவனை வெட்டி கொன்ற வழக்கில் பார்த்திபன் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். தற்போது பார்த்திபன் ஜாமீனில் வெளிவந்ததை அறிந்த எதிர் கோஷ்டி, அவரை கத்தியால் வெட்டி கொலைமுயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது.  

தண்டையார்பேட்டை போலீசார் கொலைமுயற்சி வழக்குப்பதிவு செய்து, மர்ம கும்பலை பிடிக்க இன்ஸ்பெக்டர் சங்கரநாராயணன் தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் இன்று காலை தண்டையார்பேட்டை, பிள்ளையார் கோயில் தெரு சேகர் (25), திலகர் நகர் அஜித் (20), பாலாஜி  (22), நாகராஜ் (19), ராகுல் (20), தமிழ்செல்வன் (18), சங்கர் (24), சரவணன் (24), சூர்யா (23), பரத் (22), கொளத்தூர் யுவராஜ் (18) ஆகியோரை கைது செய்து விசாரிக்கின்றனர்

Related Stories: