கடையில் போதை பொருள் விற்ற வியாபாரி சிக்கினார்

திருவள்ளூர்: திருவள்ளூரில் உள்ள கடையில் போதை பொருட்கள் விற்பனை செய்த வியாபாரியை கைது செய்தனர்.திருவள்ளூர் நகரின் மைய பகுதியான கொண்டமாபுரம்  தெருவில் உள்ள கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக திருவள்ளூர் நகர காவல் ஆய்வாளர் பத்மபபிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில், எஸ்ஐ வெங்கடேசன் தலைமையில் போலீசார் கொண்டமாபுரம் தெருவில்  சோதனை செய்தபோது அங்குள்ள ஒரு கடையில் ஹான்ஸ் விற்பனை செய்வது தெரியவந்தது. இதையடுத்து கடையில் சோதனை நடத்தி, போதை பொருட்களை விற்பனை செய்ததாக கண்ணனை (37) கைது செய்து அவரது கடையில் விற்பனைக்காக வைத்திருந்த 13.2 கிலோ ஹான்ஸை பறிமுதல் செய்தனர்.

Related Stories: