சென்னை நீர் நிலைகள் தொடர்பான வழக்கு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு தடை: உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள அனைத்து நீர் நிலைகளிலும் சிறந்த தொழில்நுட்பம் கொண்டவையாக உருவாக்க வேண்டும். குறிப்பாக அனைத்து நீர் நிலைகளிலும் ஜிபிஎஸ் அடிப்படையிலான கருவிகளை பொருத்தி கண்காணிக்க வேண்டும். நீர்நிலைகள் ஆகிரமிப்பையும் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். அவ்வாறு செய்யும் பட்சத்தில் நீர் நிலைகள் அனைத்தும் உகந்த பயன்பாட்டை அடைவது மட்டுமில்லாமல், கடலில் நீர் கலந்து வீணாவது தடுக்கப்படும். கடந்த 2015ம் ஆண்டு ஏற்பட்ட பேரழிவு போன்று நடக்காமல் தடுப்பு நடவடிக்கையை மேற்கொள்ளலாம் என்று வி.பி.ஆர்.மேனன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனுவை தாக்கல் செய்திருந்தார்.

இம்மனுவை விசாரித்த நீதிமன்றம், ‘6 மாதத்திற்குள் நீர் நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மறு ஆய்வு செய்ய வேண்டும். தமிழக  நீர்வளத்துறை மற்றும் வருவாய்த்துறை செயலாளர்களுக்கு கடந்த 2019ம் ஆண்டு என உத்தரவிட்டிருந்தது. ஆனால் அதனை அதிகாரிகள் நடைமுறைப்படுத்தாததால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கை வி.பி.ஆர்.மேனன் உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்தார். இவ்வழக்கு உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் மேற்கண்ட விவகாரம் தொடர்பாக தமிழக நீர்வளத்துறை மற்றும் வருவாய்த்துறை செயலாளர்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் அப்துல் நசீர் மற்றும் ஜெ.கே.மகேஸ்வரி ஆகியோர் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, மேல்முறையீடு மனு தொடர்பாக வி.பி.ஆர்.மேனன் பதிலளிக்க வேண்டும் என நோட்டீஸ் பிறப்பித்த நீதிபதிகள், இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் இருக்கும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு தடை விதித்து உத்தரவிட்டனர்.

Related Stories: