தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு.: வானிலை மையம் தகவல்

சென்னை: மேற்கு திசைக்காற்றின் வேகமாறுபாட்டால் தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, குமரி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

திண்டுக்கல், தேனி, தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு. மேலும் சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு நகரின் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நாளை முதல் 4 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு. நாளை, நாளை மறுநாள் வடதமிழக மாவட்டங்கள், திண்டுக்கல், தேனி, தென்காசி, விருதுநகர், நெல்லை, குமரியில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் புதுச்சேரி, காரைக்காலில் நாளை ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தமிழக கடலோர மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஆக 11-ல் மழைக்கு வாய்ப்பு. மேலும் ஆந்திர கடலோரம், மத்திய மேற்கு வங்கக்கடல், லட்சத்தீவு, மன்னார் வளைகுடா, குமரிக்கடலில் பலத்த காற்று வீச வாய்ப்பு. பலத்த காற்று வீசும் பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Related Stories: