நான் வலியில் இருக்கிறேன்.. எனக்காகப் பிரார்த்தனை செய்யுங்கள்... பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஷோயப் அக்தர் உருக்கம்..!

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஷோயப் அக்தர், ‘நான் வலியில் இருக்கிறேன், எனக்காகப் பிரார்த்தனை செய்யுங்கள்’ என்று ரசிகர்களைக் கேட்டுக் கொண்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “நான் இன்னும் 4-5 ஆண்டுகள் கூடுதலாக பாகிஸ்தானுக்கு ஆடியிருக்க முடியும் ஆனால் அப்படி ஆடியிருந்தால் அப்போதே நான் சக்கர நாற்காலியில் வாழ்நாள் பூராவும் அமர வேண்டிய துர்பாக்கியசாலியாகியிருப்பேன். அதனால்தான் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றேன். அவர் தான் கடந்த 11 ஆண்டுகளாக வலியில் இருப்பதாக வீடியோவில் கூறியுள்ளார்.

ஓய்வு பெற்ற பிறகும் முழங்கால் வலி பயங்கரம் என்கிறார். இதுதான் வேகப்பந்து வீச்சுக்கு நாம் கொடுக்கும் விலை என்கிறார் அக்தர். ஆனால் அதுவுமே பாகிஸ்தானுக்காகச் செய்வது மதிப்பு மிக்கதுதான். வேகமாக வீசுவதன் பலன் எலும்புகளை இழந்து விடுவோம். ஆனால் அது பரவாயில்லை. மீண்டும் பாகிஸ்தானுக்காக எலும்புகளை இழந்தாலும் பரவாயில்லை என்றே தோன்றுகிறது” என்றார். மேலும் தான் கடும் வலியில் இருப்பதாகவும் ரசிகர்கள் தனக்காகப் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

Related Stories: