பாஜக கூட்டணியில் இருந்து வெளியேற நிதிஷ் திட்டமா?.. விரிசல் அதிகரித்திருப்பதால் எந்நேரமும் கூட்டணி உடைய வாய்ப்பு

பாட்னா: பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் எந்நேரமும் வெளியேறக்கூடும் என்று தேசிய அரசியலில் பரபரப்பாக பேசப்படுகிறது. பீகாரில் கடந்த சட்டமன்ற தேர்தலில் பாரதிய ஜனதாவை விட ஐக்கிய ஜனதா தளம் குறைந்த இடங்களை பிடித்தாலும் நிதிஷ் குமார் முதலமைச்சர் ஆனதில் இருந்தே அங்கு இரு கட்சிகளுக்கும் இடையே உரசல்கள் தொடர்கின்றன. அண்மை காலமாக உரசல் போக்கு அதிகரித்துள்ள நிலையில் பிரதமர் மோடி தலைமையிலான நிதி ஆயோக் கூட்டத்தில் நிதிஷ்குமார் பங்கேற்பதை தவிர்த்துவிட்டார். ஒன்றிய அரசின் நிகழ்ச்சிகளை அவர் புறக்கணிப்பது இது 5வது முறையாகும்.

பாரதிய ஜனதாவிடம் நெருக்கம் காட்டிய ஆர்சிபி சிங்கை மீண்டும் மாநிலங்களவை உறுப்பினராக்குவதை தவிர்த்துவிட்டதால் அவரது ஒன்றிய அமைச்சர் பதவி பறிபோகிவிட்டது. இதனால் ஐக்கிய ஜனதா தளம் சார்பில் ஒன்றிய அமைச்சரவையில் தற்போதைய நிலையில் யாரும் இல்லை. ஒன்றிய அமைச்சரவையில் மீண்டும் இடம்பெற போவதில்லை என்று அக்கட்சி திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இதனால் பாஜக தலைமையிலான ஜனநாயக கூட்டணியில் இருந்து நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் எந்நேரமும் வெளியேறக்கூடும் என்ற யூகங்கள் தேசிய அரசியலில் இறக்கை கட்டி பறக்கின்றன.

Related Stories: