கொள்ளிடம் அருகே ரங்கநாதர் கோயிலில் வெள்ளம் புகுந்தது

கொள்ளிடம்: மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே வடரங்கம் கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் பழமை வாய்ந்த ரங்கநாதர் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் 2000 ஆண்டுகளுக்கு முன்பு கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் கட்டப்பட்டு வசிஷ்ட முனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்டது ஆகும். இந்த கோயில் பஞ்சரங்கத்தில் ஒரு ரங்கமாக விளங்கி வருகிறது. ஸ்ரீரங்கத்துக்கு அடுத்தபடியாக வடக்கு பகுதியில் கொள்ளிடம் ஆற்றில் இது அமைந்துள்ளதால் வடரங்கம் ரெங்கநாதர் என்று அழைக்கப்படுகிறது.

இந்நிலையில் தற்போது மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்பட்ட உபரி நீரால் கொள்ளிடம் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து இருக்கரைகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கின்றது. இதனால் கரையோரம் அமைந்துள்ள பழமை வாய்ந்த வடரங்கம் ரங்கநாதர் கோயிலை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இதனால் பக்தர்கள் கோயிலுக்கு உள்ளே செல்ல முடியாமல் அவதி அடைந்து உள்ளனர்.

Related Stories: