கலைஞரின் 4ம் ஆண்டு நினைவு நாள் டெல்லியில் அனைத்து கட்சியினர் மரியாதை

சென்னை: டெல்லியிலும் தமிழக முன்னாள் முதல்வர் கலைஞரின் 4ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. அப்போது அவரது உருவபடத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. டெல்லியில், தமிழக முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கலைஞரின் 4ம் நினைவு தினம் திமுக மாநிலங்களவை தலைவர் திருச்சி சிவாவின் இல்லத்தில் அனுசரிக்கப்பட்டது.

அங்கு, காங்கிரஸ் கட்சியின் மக்களவைத் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, மாநிலங்களவை துணை சபாநாயகர் ஹரிவன்ஸ், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், திமுக மாநிலங்களவை உறுப்பினர்கள் கனிமொழி என்.வி.என். சோமு, அப்துல்லா மற்றும் நியமன நாடாளுமன்ற உறுப்பினர் பி.டி.உஷா மற்றும் அனைத்து கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டு கலைஞரின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இதேபோன்று டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லம் மற்றும் திமுக அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் டெல்லிக்கான தமிழ்நாடு சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ். விஜயன் மற்றும் அரசு அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் கலைஞரின் உருவப்படம் மற்றும் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

Related Stories: