கோயில் பூசாரிகளுக்கு மாதம் 4000 ஊதியம் நலச்சங்கம் கோரிக்கை

சென்னை: கோயில் பூசாரிகளுக்கு மாதம் ஒரு 4000 ஆயிரம் ஊதியம் வழங்க வேண்டும் என்று கிராம கோயில் பூசாரிகள் நலச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து கோயில் பூசாரிகள் நலச் சங்கத் தலைவர் வாசு கூறியதாவது: திமுக ஆட்சியில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு கோயில்களுக்கும், பூசாரிகளுக்கும் பல்வேறு நலத் திட்டங்களை அறிவித்து விரைந்து செயல்படுத்தி வருகின்றார்.

குறிப்பாக  சுமார் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பூசாரிகளுக்கு மாதம் தோறும் ஊக்கத்தொகை 1000, கிராமப்புற திருப்பணி நிதி 2 லட்சம் ஆக உயர்வு, ஒரு கால பூஜை வைப்பு நிதி 2 லட்சமாக உயர்வு, சமூக நீதியை நிலைநாட்டும் வகையில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டத்தை செயல்படுத்தியுள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான,அரசு பூசாரிகளுக்கு இன்னும் பல திட்டங்களை விரைவில் செயல்படுத்த வேண்டும். அதிலும் குறிப்பாக பூசாரிகள் ஓய்வூதியத்4 ஆயிரமாக உயர்த்தி தர வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: