மதவாதம், சாதி வெறி கிருமிகளை அழிக்க கலைஞரின் நினைவு நாளில்; சூளுரைப்போம் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி அறிக்கை

சென்னை: திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்ட அறிக்கை: திமுக தலைவரும், 5 முறை தமிழகத்தின் முதல்வராகவும், 50 ஆண்டு(அரை நூற்றாண்டு) தொடர்ந்து சட்டமன்றத்தில் அமர்ந்து செங்கோலைச் செம்மையாகச் செலுத்தி, ‘திராவிட மாடல்’ஆட்சியை வலுப்படுத்தி, தொடரும் வழி ஏற்படுத்தியவர் கலைஞர். அவர் தனது வாழ்நாளில் திருப்பம் ஏற்பட்டதே தந்தை பெரியாரை சந்தித்தது, முதல் தான் என்று தனது ‘நெஞ்சுக்கு நீதி’தன்வரலாற்று நூலில் பதிவு செய்துள்ளார். அண்ணா தன் ஆட்சி நீதிக்கட்சியின் தொடர்ச்சி என்றார் 1967ல். அண்ணாவின் ஆட்சியின் தொடர்ச்சியாகவே கலைஞர் வரலாற்றை எழுதினார். சரித்திரம் படைக்கிறது.

அவரது ஆட்சி‘திராவிட மாடலின்’மாட்சியாகத் திகழும் வண்ணம் இன்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி கொள்கைக் கூட்டணியோடு அனைவருக்கும் அனைத்தும் என்னும் அரியதோர் சமூகநீதி ஆட்சியாகி சரித்திரம் படைக்கிறது. தமிழ்நாட்டின் ‘திராவிட மாடலை’இந்திய அரசமைப்புச் சட்டத்தில் ஜனநாயகத்தைக் காப்பாற்ற சனாதனம் என்ற பெயரில் வெறுப்பு அரசியலை, மதவெறியைப் பரப்பும் தீய சக்திகளிடமிருந்து இந்தியாவைக் காப்பாற்ற, இந்தத் ‘திராவிட மாடல்’சரியான தடுப்பூசியாகி, மதவெறி, சாதி வெறிக் கிருமிகளை அழித்து, மதச் சார்பற்ற, சமூகநீதி, சமதர்ம, ஜனநாயகக் குடியரசின் மாண்பைக் காப்பாற்றப் போகும் பேராயுதமாகும். கலைஞர் நினைவு நாளில் சூளுரையாக இது அமையட்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: