அமெரிக்க கடற்படையின் கப்பல் காட்டுப்பள்ளி துறைமுகம் வருகை

சென்னை: எல்டியின் காட்டுப்பள்ளி கப்பல் கட்டும் தளத்துக்கு  அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான பழுது பார்ப்பு மற்றும் பராமரிப்பு கப்பல் நேற்று வந்தது. அது, காட்டுப்பள்ளி துறைமுகத்துக்கு வரும் கப்பல்களை பழுது பார்ப்பது மற்றும் பராமரிக்கும் பணியில் ஈடுபடும். இந்திய அரசு பாதுகாப்பு அமைச்சகத்தின் பாதுகாப்பு செயலர் அஜய் குமார், துணை அட்மிரல், சஞ்சய் ஜாஜு, கூடுதல் செயலாளர் மற்றும்  ராஜீவ் பிரகாஷ், பாதுகாப்பு அமைச்சகத்தின் பாதுகாப்பு உற்பத்தி, இணை செயலாளர் ஆகியோர் கப்பலை வரவேற்றனர்.

மேலும், சென்னையில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரி ஜூடித் ரவின் மற்றும் டெல்லியில்  உள்ள அமெரிக்க தூதரகத்தின் பாதுகாப்பு அதிகாரி ரியர் அட்மிரல் மைக்கேல் பேக்கர் ஆகியோரும் கப்பல் கட்டும் தளத்தில் உடனிருந்தனர். இதுகுறித்து பாதுகாப்பு செயலாளர்  அஜய் குமார் கூறுகையில், ‘‘அமெரிக்க கப்பல்களுக்கு தளவாடங்கள், பழுது மற்றும் மறுசீரமைப்புகளை வழங்குவதற்கான இந்தியாவின் முன்முயற்சி, இந்தியாவிற்கும் இடையேயான மூலோபாய கூட்டாண்மையை மேம்படுத்துவதில் சிறப்பு முக்கியத்துவம் பெறுகிறது’’என்றார்.

சென்னையில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரி  ஜூடித் ரவின் கூறுகையில், ‘‘இது நமது வலுப்படுத்தப்பட்ட அமெரிக்கஇந்திய கூட்டாண்மையின் அடையாளமாக கொண்டாடப்பட வேண்டிய ஒரு முக்கிய வளர்ச்சியாகும்’’என்றார்.

Related Stories: