விமானத்தில் இருந்து இறங்கி ஓடுபாதையில் நடந்து சென்ற பயணிகள்; பேருந்து வர தாமதம்

புதுடெல்லி: டெல்லி விமான நிலையத்தில் பேருந்துக்காக 45 நிமிடங்கள் காத்திருந்த தனியார் விமான நிறுவன பயணிகள் விமான ஓடுபாதையில் நடந்து சென்றனர். இது குறித்த விசாரணைக்கு டிஜிசிஏ உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் கடந்த ஒரு மாதமாக தனியார் விமான நிறுவனங்களின் சேவை பல்வேறு குறைபாடுகளால் பிரச்னைக்கு உள்ளாகி வருகிறது. இந்நிலையில், ஐதராபாத்தில் இருந்து டெல்லி வந்த தனியார் விமானப் பயணிகள் தங்களை இறங்கும் முனையத்துக்கு ஏற்றி செல்லும் விமான நிறுவனத்தின் பேருந்துக்காக 45 நிமிடங்கள் காத்திருந்தனர்.

 பேருந்து வராமல் போகவே, அவர்கள் டார்மேக் என்றழைக்கப்படும் விமான ஓடுபாதையில் நடக்க தொடங்கினர். இது குறித்த முதல் கட்ட விசாரணையில், தனியார் விமான ஊழியர்களின் வேண்டுகோளுக்கு செவி சாய்க்காமல் அவர்கள் விமான ஓடுபாதையில் நடக்க தொடங்கினர். சிறிது நேரத்தில் விமான நிறுவன பேருந்து வந்ததும் நடந்து சென்றவர்கள் உள்பட அனைத்து பயணிகளும் ஏற்றி செல்லப்பட்டு இறக்கி விடப்பட்டனர் என்பது தெரிய வந்ததுள்ளது. இருந்த போதிலும், இது பற்றிய விசாரணைக்கு விமான போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories: