பக்தர்கள் வருகை குறைந்தது அமர்நாத் யாத்திரை தற்காலிக நிறுத்தம்

ஜம்மு: நாட்டின் மிகவும் பிரபலமான அமர்நாத் புனித யாத்திரை, ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான சிவ பக்தர்களால் மேற்கொள்ளப்படுகிறது. இந்த ஆண்டுக்கான யாத்திரை கடந்த  ஜூன் 30ம் தேதி தொடங்கி  ஆகஸ்ட் 11ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. மொத்தம் 3880 மீட்டர் உயரத்தில் இருக்கும் கோவிலுக்கு தினமும்  ஆயிரக்கணக்கான பக்தர்கள் சென்றனர். இதுவரை 3 லட்சம் பேர் புனித யாத்திரை சென்றுள்ளனர். ஆனால், கடந்த சில நாட்களாக பக்தர்கள் வராததால் ஜம்முவில் உள்ள பகவதி நகர் மலையடிவார முகாம் வெறிச்சோடி காணப்படுகிறது. இதையடுத்து ஜம்முவில் இருந்து யாத்திரை செல்வது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில்,‘‘போதுமான பக்தர்கள் வராததால் ஜம்முவில் இருந்து யாத்திரை ரத்து செய்யப்பட்டுள்ளது. பக்தர்களின் வருகையை பொறுத்து யாத்திரை முடிவதற்கு முன்னர் மேலும் ஒரு குழுவை அனுப்புவதற்கு திட்டமிட்டுள்ளோம்’’என்றனர். சில நாட்களுக்கு முன்னர் ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுனர் மனோஜ் சின்கா விடுத்த வேண்டுகோளில், வரும் நாட்களில் மோசமான வானிலை மற்றும் பலத்த மழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திப்பதால் பக்தர்கள் ஆக.5ம் தேதிக்கு முன்னர் அமர்நாத் கோயிலுக்கு செல்ல வேண்டும் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: