திருப்பத்தூர் அருகே தற்கொலை வழக்கில் திருப்பம் இளம்பெண்ணை பலாத்காரம் செய்து கழுத்து நெரித்துக்கொலை; போலீஸ் விசாரணையில் பரபரப்பு வாக்குமூலம்

திருப்பத்தூர்: திருப்பத்தூர் அருகே பெற்றோரை இழந்த இளம்பெண் தற்கொலை வழக்கில் திடீர் திருப்பமாக, அவரை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்து கிணற்றில் வீசிய கொரியர் நிறுவன ஊழியரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டம் கொரட்டி அருகே உள்ள செல்ரப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சந்தோஷ்பிரியா(22). இவரது பெற்றோர் பல ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டனர். இதனால் சந்தோஷ்பிரியா, தனது தாத்தா சீனன் என்பவரிடம் வளர்ந்து வந்தார். தற்போது பிஎஸ்சி முடித்துவிட்டு டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுத தனியார் பயிற்சி மையத்தில் படித்து வந்தார். கடந்த 22ம் தேதி வீட்டில் இருந்த சந்தோஷ்பிரியாவை திடீரென காணவில்லை. மறுநாள் அங்குள்ள கிணற்றில் அவரது சடலம் மிதந்தது.

தகவலறிந்த கந்திலி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் தற்கொலை வழக்காக பதிவு செய்தனர். இதற்கிடையில் பிரேத பரிசோதனை அறிக்கையில், சந்தோஷ்பிரியா கழுத்தை நெரித்து கொல்லப்பட்டது தெரியவந்தது. கந்திலி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர். அதில் சந்தோஷ்பிரியா பயன்படுத்தி காணாமல் போன செல்போனின் ஐஎம்இஐ எண்ணை கொண்டு விசாரணை நடத்தினர். அப்போது கடந்த சில நாட்களாக சுவிட்ச்ஆப் ஆகியிருந்த செல்போன், கடந்த 4 நாட்களுக்கு முன் ‘ஆன்’ ஆனது தெரியவந்தது. அந்த செல்போனை திருப்பத்தூர் நகரில் கோட்டை தெருவை சேர்ந்த ஒரு வாலிபர் பயன்படுத்தியது தெரியவந்தது. அந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். அப்போது, செல்ரப்பட்டி கிராமத்தை சேர்ந்த கொரியர் நிறுவனத்தில் வேலை செய்யும் மகேந்திரன்(21) என்பவர் ரூ. 5 ஆயிரத்துக்கு செல்போனை விற்பனை செய்ததாக தெரிவித்தார்.

இதையடுத்து போலீசார் சந்தோஷ்பிரியாவின் வீட்டின் அருகே வசிக்கும் மகேந்திரன் என்பவரை நேற்று முன்தினம் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது மகேந்திரன், சந்தோஷ்பிரியாவை பலாத்காரம் செய்து கழுத்து நெரித்து கொன்று கிணற்றில் சடலத்தை வீசியது தெரியவந்தது. இதையடுத்து கந்திலி போலீசார் தற்கொலை வழக்கை கொலை வழக்காக மாற்றி, மகேந்திரனை நேற்று கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

மகேந்திரனிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். இதுகுறித்து போலீசார் கூறியதாவது: எனது பக்கத்து வீட்டை சேர்ந்த சந்ேதாஷ்பிரியாவை நான் ஒருதலையாக காதலித்து வந்தேன்.

எனது காதலை அவரிடம் கூறினேன். ஆனால் அவர் ஏற்கவில்லை. என்னை காதலிக்கும்படி பலமுறை வற்புறுத்தியும் அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. இருப்பினும் எனக்கு அவர் மீது தீராத ஏக்கம் இருந்தது. கடந்த ஜூலை 22ம் தேதி இரவு சந்தோஷ்பிரியா ெதருவில் தனியாக நடந்து வந்தார். அப்போது அவ்வழியாக பைக்கில் வந்த நான், அவரை பைக்கில் அமரும்படி கூறினேன். மேலும் என்னை காதலிக்கும்படி கூறினேன். ஆனால் அவர் பைக்கில் ஏற மறுத்து, தான் வேறு ஒருவரை காதலிப்பதாக தெரிவித்தார். இதனால் ஆத்திரமடை ந்த நான், அவளை சரமாரி தாக்கி அருகில் உள்ள கம்புக்கொல்லையில் பலாத்காரம் செய்தேன். பின்னர் கழு த்தை நெரித்துக்கொன்று விவசாய நிலத்தில் உள்ள கிணற்றில் வீசிவிட் டேன். இவ்வாறு மகேந்திரன் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

Related Stories: