அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ. 70 லட்சம் மோசடி செய்தவர் கைது

கடலூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டம், கனிச்சி கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி மகன் சிபிசரண்(36). இவர் கடலூரில் உள்ள ஒரு தனியார் வங்கியில் நகை கடன் பிரிவில் வேலை பார்த்து வருகிறார். இவர் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அந்த வங்கியின் கிளையில் பணிபுரிந்த போது, அந்த வங்கியில் பணிபுரியும் மாணிக்கவேல் என்பவர் மூலம், தருமபுரி மாவட்டம் காரிமங்கலத்தை சேர்ந்த பொன்னுசாமி மகன் சிவசங்கர்(48) என்பவர் அறிமுகமாகியுள்ளார். அப்போது சிவசங்கர் அரசு அலுவலகங்களில் வேலை வாங்கித் தர முடியும் என்று கூறியுள்ளார்.

இதை நம்பிய சிபிசரண் அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு அரசு வேலை பெற மொத்தம் ரூ.  70,10,000 வாங்கி கொடுத்துள்ளார். ஆனால்,சிவசங்கர் அவர் கூறியபடி யாருக்கும் அரசு வேலை வாங்கித் தரவில்லை. இது குறித்து சிபிசரண் கடலூர் மாவட்ட எஸ்பி சக்தி கணேசனிடம் புகார் மனு அளித்தார். இதையடுத்து சென்னையில் பதுங்கி இருந்த சிவசங்கரை கடலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

Related Stories: