கடை பூட்டை உடைத்து ரூ.70 ஆயிரம் கொள்ளை

துரைப்பாக்கம்: பனையூர் பகுதியை சேர்ந்தவர்  கேசவன் (48). அப்பகுதி வியாபாரிகள் சங்க செயலாளரான இவர்,  கிழக்கு கடற்கரை சாலையில் மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு கடையை பூட்டிவிட்டு சென்ற இவர் நேற்று காலை கடையை திறக்க வந்தார். அப்போது ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. அதிர்ச்சியடைந்த அவர், கடையின்  உள்ளே சென்று பார்த்தபோது, கல்லா உடைக்கப்பட்டு, அதில் இருந்த ₹70 ஆயிரம் மற்றும் மளிகை பொருட்களை மர்ம நபர்கள்  கொள்ளை அடித்து சென்றது தெரியவந்தது.

மற்றொரு சம்பவம்: கானத்தூர் பகுதியை சேர்ந்த கார்த்திக் (26), தனது வீட்டின் முன் பகுதியில் பெட்டிக் கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம், இரவு கடையை பூட்டிவிட்டு சென்றார். இந்நிலையில், நள்ளிரவு ஒரு மணி அளவில் கடை பகுதியில் இருந்து சத்தம் கேட்டது. இதனால், கார்த்திக் வெளியே வந்து பார்த்தபோது, மர்ம நபர்கள் 2 பேர் பைக்கை நிறுத்திவிட்டு இவரது கடையின் பூட்டை உடைத்து கொண்டு உள்ளே நுழைந்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த கார்த்திக், ‘‘திருடன் திருடன்’’ என்று சத்தம் போட்டார். இதையடுத்து, அந்த  மர்ம நபர்கள் பைக்கில் ஏறி தப்பிச்சென்றனர். இப்புகாரின்பேரில், கானத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Related Stories: