குடும்பம் நடத்த மனைவியை அனுப்ப மறுத்ததால் மாமியாரை கத்தியால் குத்தி கொன்ற மருமகன் கைது

ஆலந்தூர்: மனைவியை தன்னுடன் வாழ அனுப்ப மறுத்த மாமியாரை, கத்தியால் குத்தி கொலை செய்த மருமகனை போலீசார் கைது செய்தனர். மடிப்பாக்கம் பஜனை கோயில் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் (40). இவரது மனைவி கீதா (35). இவர்களுக்கு திருமணம் நடந்து 17 ஆண்டுகள் ஆகிறது. தம்பதிக்கு, 2 குழந்தைகள் உள்ளனர். கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன் ஏற்பட்ட தகராறில்,  மனைவி கீதா கோபித்துக் கொண்டு, அதே பகுதியில் உள்ள அவரது தாயார் வீட்டிற்கு குழந்தைகளுடன் சென்றுவிட்டார்.

அவரை, குடும்பம் நடத்த வரும்படி ஆறுமுகம் பலமுறை அழைத்துள்ளார். ஆனால், அவரது மாமியார் அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு குடிபோதையில் மாமியார் வீட்டிற்கு வந்த ஆறுமுகம், தன்னுடன் குடும்பம் நடத்த மனைவியை அனுப்புமாறு கேட்டுள்ளார். ஆனால், மாமியார் மற்றும் மைத்துனர் ஆகியோர், உன்னுடன் கீதாவை அனுப்ப எங்களுக்கு விருப்பம் இல்லை, என்று கூறியுள்ளனர். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த ஆறுமுகம், மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மாமியார் சித்ராவின் கழுத்து பகுதியிலும், மைத்துனர் உதயகுமாரின் வயிற்று பகுதியிலும் கத்தியால் குத்தினார்.

அக்கம் பக்கத்தினர், அவர்களை மீட்டு, அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆறுமுகத்திற்கும் காயம் ஏற்பட்டது. அவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, மடிப்பாக்கம் காவல்நிலையத்தில் ஆஜரானார். அவர்மீது கொலை முயற்சி வழக்குபதிந்து விசாரணை நடத்திவந்தனர். இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்த சித்ரா அதிக ரத்த போக்கின் காரணமாக உயிரிழந்தார். இதனைஅடுத்து  கொலைமுயற்சி வழக்கை போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து ஆறுமுகத்தை கைது செய்துள்ளனர்.

Related Stories: