மலையாள நடிகர் சஜீத் மரணம்

திருவனந்தபுரம்: கேரள  மாநிலம் கொச்சி பட்டாளம் பகுதியைச் சேர்ந்தவர் சஜீத் (54). வெப்  தொடர்களில் நடித்து பிரபலமானவர். பின்னர் மலையாள சினிமாவிலும் நடிக்க  தொடங்கினார். கள, கனகம் காமினி கலகம், ஜானே மன் உள்பட பல படங்களில் நடித்து  உள்ளார்.

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு உடல்  நலக்குறைவால் கொச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று அதிகாலை சஜீத் மரணமடைந்தார். அவரது உடல் நேற்று மாலை போர்ட்  கொச்சியில் உள்ள பள்ளிவாசல் மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

Related Stories: