‘மிஸ் இந்தியா யுஎஸ்ஏ’ பட்டம் வென்றார் ஆர்யா

வாஷிங்டன்: அமெரிக்காவில் நடந்த மிஸ் இந்தியா யுஎஸ்ஏ அழகி போட்டியில் வெர்ஜினியா  இளம்பெண் ஆர்யா வால்வேக்கர்(18) பட்டம் வென்றார். அமெரிக்காவின் நியுஜெர்சி நகரில்   மிஸ் இந்தியா யுஎஸ்ஏ 2022 போட்டி நடந்தது. இதில் வெர்ஜீனியாவை சேர்ந்த ஆர்யா வால்வேக்கர் மிஸ் இந்தியா யுஎஸ்ஏ பட்டத்தை வென்றார். வெர்ஜினியா பல்கலைக்கழக மருத்துவ மாணவி சவும்யா சர்மா 2ம் இடத்தையும், நியூ ஜெர்சியை சேர்ந்த சஞ்சனா செக்கூரி 3ம் இடத்தையும் பிடித்தனர். அழகி பட்டம் வென்ற ஆர்யா கூறுகையில், ‘‘திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் நடிக்க வேண்டும் என்பதும் எனது சிறுவயது கனவு.  

மேலும் புதிய இடங்களைத்தேடிப் பயணம் செல்வது, சமைப்பது மற்றும் விவாத நிகழ்ச்சிகளில் பங்கேற்பது போன்ற பொழுதுபோக்குகள் ஆகும்’’ என்று கூறினார். மிஸ் இந்தியா யுஎஸ்ஏ, மிஸஸ் இந்தியா யுஎஸ்ஏ மற்றும் மிஸ் டீன் இந்தியா யுஎஸ்ஏ ஆகிய மூன்று வெவ்வேறு போட்டிகளில் 30 மாகாணங்களைச்சேர்ந்த 74 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். மூன்று பிரிவுகளிலும் வெற்றி பெறுபவர்கள் அடுத்த ஆண்டு மும்பையில் நடைபெற உள்ள சர்வதேச அளவிலான அழகி போட்டிக்கு அனுப்பப்படுவார்கள். நிகழ்ச்சியில் பாடகி ஷிபானி காஷ்யப், குஷி படேல் (மிஸ் இந்தியா 2022) மற்றும் ஸ்வாதி விமல் (மிஸஸ் இந்தியா வேர்ல்டுவைட்) ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related Stories: