ஐஎன்எஸ் விக்ராந்த் போர் கப்பலை பார்வையிட்டார் மோகன்லால்

திருவனந்தபுரம்: கொச்சி கப்பல் கட்டும் தளத்தில், முற்றிலும் உள்நாட்டு தொழில்நுட்பங்களுடன் கூடிய ஐஎன்எஸ் விக்ராந்த் என்ற போர் கப்பல் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இந்த கப்பல் முறைப்படி அடுத்த மாதம் நாட்டுக்கு அர்ப்

பணிக்கப்படுகிறது. இந்நிலையில், அந்த கப்பலை மோகன்லால் நேரில் சென்று பார்வையிட்டார். இதற்காக கொச்சி கப்பல் கட்டும் தளத்துக்கு வந்த மோகன்லாலை  கடற்படை மற்றும் கொச்சி கப்பல் கட்டும் தள அதிகாரிகள் வரவேற்றனர்.

பிறகு கடற்படை வீரர்களுடன் சேர்ந்து ஐஎன்எஸ் விக்ராந்த் போர் கப்பலை மோகன்லால் சுற்றிப் பார்த்தார். அங்கு  பணியாற்றிக் கொண்டிருந்த மாலுமிகள் மற்றும் ஊழியர்களுடன் சில நிமிடங்கள் உரையாடினார். பிறகு அவர் தனது டிவிட்டரில், ‘இந்திய கடற்படையை மேலும் பலப்படுத்தும் நோக்கத்தில் ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பல் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கப்பல் வெற்றிபெற வாழ்த்துகள்’ என்று பதிவிட்டுள்ளார். இந்திய ராணுவத்தில் கவுரவ மேஜராக மோகன்லால் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories: