சொல்லிட்டாங்க...

பாலியல் வழக்கில் மரண தண்டனை விதிக்கும் நிர்பயா சட்டம் அமலுக்கு வந்த பிறகு, பெண்கள் அதிகளவில் கொல்லப்படுகிறார்கள். - ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்.

நான் எனது கட்சியில் இருந்து விலகுகிறேன். ஐக்கிய ஜனதா தளம் ஒரு மூழ்கும் கப்பல். அதில் எப்படி நான் பயணிப்பது. - முன்னாள் ஒன்றிய அமைச்சர் ஆர்.சி.பி.சிங்.

2024-ம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் பாஜ ஆட்சி முறியடிக்கப்பட வேண்டும். தேர்தலுக்கு முன்பு அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்று சேர வேண்டும். - இந்திய கம்யூனிஸ்ட் தேசிய பொதுச் செயலாளர் டி.ராஜா.  

நாட்டில் பொருட்களின் விலை உயர்ந்துள்ளன. இதனால் ஏழை, நடுத்தர வர்க்கத்தினர் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். அவர்களின் நுகர்வும் சேமிப்பும் குறைந்து விட்டது. - முன்னாள் ஒன்றிய அமைச்சர் சிதம்பரம்.

Related Stories: