பர்மிங்காம்,: காமன்வெல்த் மகளிர் ஒற்றையர் பிரிவு பைனலில் விளையாட இந்திய நட்சத்திரம் பி.வி.சிந்து தகுதி பெற்றார். அரையிறுதியில் சிங்கப்பூர் வீராங்கனை ஜியா மின் யிவோவுடன் நேற்று மோதிய சிந்து 21-19, 21-17 என்ற நேர் செட்களில் வெற்றியை வசப்படுத்தினார். மற்றொரு அரையிறுதியில் கனடாவின் மிஷெல் லி 2-1 என்ற கணக்கில் ஸ்காட்லாந்தின் கிறிஸ்டி கில்மோரை வீழ்த்தினார். தங்கப் பதக்கத்துக்காக இன்றைய பைனலில் சிந்து - மிஷெல் பலப்பரீட்சை நடத்துகின்றனர்.