ஏழுமலையானை தரிசிக்க 12 மணிநேரம் காத்திருப்பு

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 12 மணிநேரம் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். மேலும், ஒரே நாளில் 4.04 கோடியை காணிக்கையாக செலுத்தியுள்ளனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். கோயிலில் வார விடுமுறை நாட்களில் கூடுதலாக பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர்.  

விடுமுறை நாட்களில் பக்தர்கள் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் பலமணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். கோயிலில் நேற்று முன்தினம் 79,525 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 39,545 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். உண்டியலில் ₹4.04 கோடியை காணிக்கையாக செலுத்தியுள்ளனர். இந்நிலையில் நேற்று காலை வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள 28 அறைகள் நிரம்பியிருந்துது. இதனால் இலவச தரிசன வரிசையில் பக்தர்கள் சுமார் 12 மணிநேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

Related Stories: