காசா மீது இஸ்ரேல் தாக்குதல் தீவிரவாத அமைப்பின் 2வது உயர் தளபதி பலி

ஜெருசலேம்: இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வருகிறது. பாலஸ்தீனத்தின் மேற்குகரை, காசா பகுதியில் இருந்து இஸ்ரேல் மீது அவ்வப்போது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு இஸ்ரேலும் பதிலடி கொடுத்து வருகிறது. காசா பகுதியில் பாலஸ்தீன நாட்டின் இஸ்லாமிக் ஜிகாத் (ஐஜே) என்ற தீவிரவாத அமைப்பு செயல்பட்டு வருகிறது. ஈரான் ஆதரவுடன் செயல்படும் ஐஜே, ஹமாஸ் தீவிரவாத அமைப்புடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.

காசாவில் ஐஜே அமைப்பினரை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் கடந்த வெள்ளிக்கிழமை நடத்திய தாக்குதலில், அதன் ஆயுதக்குழு பிரிவான அல்-குவாட்ஸ் பிரிகேடிஸ் தளபதி அல் ஜாபரி கொல்லப்பட்டார். இதற்கு பதிலடியாக ஐஜே அமைப்பினர் இஸ்ரேல் மீது வான்வழி தாக்குதல் நடத்தினர். இதில் 2ம் கட்ட உயர் தளபதி காலித் மன்சூர் உயிரிழந்தார். இதையடுத்து, இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் போர் பதற்றம் நீடித்து வருகிறது. இந்த தாக்குதலில் குழந்தைகள் உட்பட 24 பொதுமக்களும் பலியாகி உள்ளனர். காசாவில் பல குடியிருப்பு கட்டிடங்கள் ஏவுகணை வீச்சில் தரைமட்டமாகி மக்கள் வீடுகளை இழந்து தவிக்கின்றனர்.

Related Stories: