உளவு கப்பலுக்கு திடீர் தடை; இலங்கை முடிவுக்கு சீனா கடும் எதிர்ப்பு: அவசர கூட்டத்துக்கு அழைப்பு

கொழும்பு: இலங்கையில் உள்ள அம்பந்தோட்டா துறைமுகத்தை 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுத்துள்ள சீனா, அந்நாட்டு  ராணுவத்தின் ‘யுவான் வாங்க்-5’ என்ற செயற்கைக்கோள்களை கண்காணிக்கும் உளவுக் கப்பலை இந்த துறைமுகத்தில் நிறுத்தி சில பணிகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. இதற்காக அம்பந்தோட்டாவுக்கு 11ம் தேதி வரும் கப்பல், 17ம் தேதி வரை அங்கேயே முகாமிட்டு செயற்கைக்கோள் கண்காணிப்பு மற்றும் உளவு பணிகளை மேற்கொள்ளும் என தகவல்கள் வெளியாகின. இதற்கு இலங்கை அரசு அனுமதி அளித்திருந்தது.

இது, இந்தியாவின் பாதுகாப்புக்கு இது மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்பதால், இலங்கையின் இந்த முடிவுக்கு ஒன்றிய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து, இந்தியாவின் எதிர்ப்புக்கு பணிந்துள்ள இலங்கை அரசு, இப்போதைக்கு அம்பந்தோட்டாவுக்கு உளவு கப்பலை அனுப்ப வேண்டாம் என்று சீனாவுக்கு கடிதம் எழுதியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள இலங்கைக்கான சீன தூதர், ‘கப்பலுக்கு அனுமதி மறுப்பது, இருதரப்பு உறவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தும்’ என்று எச்சரித்துள்ளார். இந்த சூழலில், அவசர ஆலோசனை கூட்டத்துக்கு இலங்கை அதிகாரிகளுக்கு சீன தூதரகம் அழைப்பு விடுத்துள்ளது.

Related Stories: