சர்வதேச செஸ் கூட்டமைப்பின் ஃபிடே-வின் துணைத் தலைவராக கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் தேர்வு!!

சென்னை: சர்வதேச செஸ் கூட்டமைப்பின் துணைத் தலைவர் உள்ளிட்ட பொறுப்புகளுக்கான தேர்தல் சென்னையில் உள்ள நட்சத்திர விடுதியில் நடந்தது. சர்வதேச செஸ் கூட்டமைப்பின் துணைத் தலைவராக கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் தேர்வு சேதப்பட்டுள்ளார். சர்வதேச செஸ் கூட்டமைப்பின் தலைவராக மீண்டும் ஆர்காடி வோர்க்கோவிச் தேர்வாகியுள்ளார்.

சர்வதேச செஸ் கூட்டமைப்பின் ஃபிடே-வின் துணைத் தலைவராக தமிழகத்தை சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஐந்து முறை உலக சாம்பியனான விஸ்வநாதன் ஆனந்திற்கு இந்த முக்கிய பதவி கிடைத்துள்ளது.

சர்வதேச செஸ் கூட்டமைப்பின் தலைவர் மற்றும் துணைத் தலைவருக்கான பதவிக்காலம் நிரைவடைந்ததை தொடர்ந்து புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான ஆலோசனை கூட்டம் சென்னையில் கடந்த 1-ம் தேதி முதல் நடைபெற்று வந்தது.

இன்று தலைவர் மற்றும் துணைத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் சென்னையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. இந்த தேர்தலில் ஏற்கனவே தலைவர் பதவியில் இருக்கக்கூடிய ஆர்காடி வோர்க்கோவிச் மீண்டும் போட்டியிட்ட நிலையில் ஃபிடே-வின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அதேபோன்று துணைத் தலைவர் பதவிக்கு தமிழகத்தை சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். 1986 முதல் செஸ் போட்டிகளில் பங்கேற்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்து வரக்கூடிய விஸ்வநாதன் ஆனந்திற்கு இந்த முக்கிய பொறுப்பு கிடைத்திருப்பது தமிழகத்திற்கு மேலும் கிடைத்த பெருமையாகவே கருதப்படுகிறது.

Related Stories: