சிறுமிக்கு பாலியல் தொல்லை: ரயில்வே ஒப்பந்த ஊழியர் கைது

தாம்பரம்: பல்லாவரம் அருகே 11 வயது வாய்பேச முடியாத சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ரயில்வே ஒப்பந்த ஊழியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். பல்லாவரம் அடுத்த திரிசூலம், மங்கள விநாயகர் கோயில் தெருவை சேர்ந்தவர் காளியப்பன் (22). திரிசூலம் ரயில் நிலையத்தில் தூய்மை பணியாளராக ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்து வருகிறார். இவர், நேற்று  அதே பகுதியை சேர்ந்த 11 வயது வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளி சிறுமியிடம், சாக்லெட்  வாங்கி தருவதாக ஏமாற்றி வீட்டு அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனிடையே, வெளியில் விளையாடிக்கொண்டிருந்த மகள் காணாததால் அதிர்ச்சியடைந்து பெற்றோர் தேடினர்.

இந்நிலையில் காளியப்பன் வீட்டுக்கு சென்று பார்த்தபோது சிறுமிக்கு அவர் பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. அப்போது, சிறுமியின் பெற்றோரை பார்த்து அதிர்ச்சியடைந்த காளியப்பன், அவர்களை தாக்கிவிட்டு தப்பிஓடிவிட்டார். இதுகுறித்து தாம்பரம் மகளிர் காவல்நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் செய்தனர். அதன்படி போலீசார் வழக்குப்பதிவு செய்து  சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த காளியப்பனை நேற்று போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். பின்னர் அவரை தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.  இந்த சம்பவம் பல்லாவரம் அருகே பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: