தேசத் துரோக வழக்கில் ரஷ்ய விஞ்ஞானி கைது; புடினுக்கு நெருக்கமானவர்

மாஸ்கோ: ரகசியங்களை கசிய விட்டதாக புடினுக்கு நெருக்கமான ரஷ்ய விஞ்ஞானி தேசத்துரோக வழக்கில் கைது எய்யப்பட்டார். ரஷ்யாவை சேர்ந்த ‘நோவோசிபிர்ஸ்க்’ என்ற ஆராய்ச்சி நிறுவனம், அதிநவீன ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை தயாரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதன் தலைவராக இருந்த ரஷ்ய விஞ்ஞானி ஆண்ட்ரே ஷிப்லியுக், ஏவுகணை ரகசியங்களை கசிய விட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, தேசத் துரோக குற்றத்துக்காக நேற்று அவர் கைது செய்யப்பட்டார். ரஷ்யாவின் ஹைப்பர்சோனிக் ஏவுகணை அமைப்புகளை உருவாக்குவதற்கான ஆராய்ச்சிகளை சமீப காலமாக இவர்தான் ஒருங்கிணைத்து வந்தார்.

இந்த ஆராய்ச்சி நிறுவனத்தில் ஏற்கனவே கடந்த மாதம் 2 விஞ்ஞானிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். ரஷ்யாவில் தேசத் துரோக சட்டத்தில் கைது செய்யப்படுபவர்களுக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும். சாத்தான்-2 ஏவுகணை உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் தொடர்ந்து வரும் நிலையில், புதிய ஹைப்பர்சோனிக் ஏவுகணையை ரஷ்ய அதிபர் புடின் சோதனை செய்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ‘இந்த ஏவுகணையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாதது. இதேபோல், சாத்தான் -2 என்ற பெயரில் மற்றொரு ஏவுகணையும் உருவாக்கப்பட்டு வருகிறது. இது. உலகின் மிக ஆபத்தான ஆயுதம். 2 ஏவுகணைகளும் இந்தாண்டு இறுதிக்குள் தயராகி விடும்,’என்று தெரிவித்துள்ளார்.

Related Stories: