வாக்கிங் சென்றபோது நீதிபதியை கொன்ற 2 குற்றவாளிகளுக்கு: சாகும் வரை சிறை

தன்பாத்: ஜார்கண்ட் மாநிலம், தன்பாத் மாவட்ட நீதிபதியாக இருந்தவர் உத்தம் ஆனந்த். கடந்தாண்டு ஜூலை 28ம் தேதி இவர் சாலையில் நடைபயிற்சி சென்றார். சாலையின் ஒரத்தில் பாதுகாப்பான முறையில் சென்று கொண்டிருந்த இவரை, ஒரு ஆட்டோ வேகமாக அவரை குறி வைத்து மோதி கொன்று விட்டு பறந்தது. இந்த  வழக்கில் ஆட்டோ ஓட்டுநர் லகான் வர்மா, அவருடைய கூட்டாளி ராகுல் வர்மா ஆகியோரை சிபிஐ கைது செய்தது.  

இந்த வழக்கை விசாரித்த சிபிஐ நீதிமன்றம், கடந்த மாதம் 28ம் தேதி இருவரையும் குற்றவாளிகளாக அறிவித்தது. அவர்களுக்கான தண்டனை நேற்று அறிவிக்கப்பட்டது. இதில், நீதிபதி கொல்லப்பட்டது அபூர்வத்திலும் அபூர்வமானது என்று தீர்ப்பளித்த நீதிபதி, 2 பேருக்கும் சாகும் வரை சிறை தண்டனை விதித்தார்.

Related Stories: