பிறந்த நாளை கொண்டாட நிர்வாண போஸ் கொடுத்த மாணவி: பல்கலை வளாகத்தில் பரபரப்பு

வாஷிங்டன்: தனது பிறந்த நாளை கொண்டாடுவதற்காக பல்கலைக்கழக வளாகத்தில் நிர்வாண போஸ் கொடுத்த மாணவியை பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அமெரிக்காவின் தல்லாஹஸ்ஸி வளாகத்தில் உள்ள புளோரிடா ஏ அண்ட் எம் பல்கலைக்கழகத்தில் படிக்கும் முதுகலை பட்டதாரி மாணவி டெரிகா வில்லியம்ஸ் என்பவர், தனது பிறந்த நாளை முன்னிட்டு பல்கலைக்கழகத்தின் ராட்டில்ஸ்னேக் சிலைக்கு அருகில் நிர்வாண ஆடைகளை அணிந்து போஸ் கொடுத்தார். அதனால், அவர் பல்கலைக்கழக நிர்வாகம் மற்றும் சக மாணவர்கள் மத்தியில் கடும் விமர்சனங்களை எதிர்கொண்டார்.

முன்னதாக டெரிகா தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு, ‘ஆத்திரமூட்டும் வகையில் நான் ஆடை அணிந்திருக்கிறேன் என்பது தெரியும். இவ்வாறு ஆடை அணிவதால் ஏற்படும் அனுபவங்களை அறிந்து கொண்டேன். நான் எப்படி ஆடை அணிய வேண்டும் என்பது எனது அடிப்படை உரிமை. எனது திறன்கள் மற்றும் புத்திசாலித்தனம் குறித்து நிறைய பேர் கேள்வி எழுப்பினர். 24 வயதில் முதுகலைப் பட்டம் பெற்றேன். ஆடைகள் அணிவதை வைத்து எதையும் வரையறுக்க வேண்டாம்’ என்று பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து இன்ஸ்டாகிராம் பயனர் ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில், ‘உங்களது கல்வி, அழகு மற்றும் சாதனைகளை பெற்ற நீங்கள், மதிப்புமிக்க பல்கலைக்கழகத்தின் முன் நிர்வாணமாக உங்களது உடலை காட்டுவது அழகல்ல’ என்று கூறியுள்ளார்.

Related Stories: