சென்னை மணலி அருகே ரூ.35 லட்சம் மதிப்புள்ள 29 டன் இரும்பு தகடுகளை கொள்ளையடித்த பாஜக நிர்வாகி உட்பட 4 பேர் கைது: போலீசார் அதிரடி..!!

சென்னை: சென்னை மணலி அருகே 35 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 29 டன் இரும்பு தகடுகளை கொள்ளையடித்த பாஜக நிர்வாகி உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். சென்னையில் அண்ணா சாலையை சேர்ந்த ரவிக்குமார் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இவர் கடந்த மாதம் 16ம் தேதி கர்நாடக மாநிலத்தில் இருந்து லாரியில் ஏற்றி வந்த சுமார்  29 டன் எடையுள்ள இரும்பு தகடுகளை காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் இறக்குவதற்கு லாரி ஓட்டுநர் செல்வத்திடம் கொடுத்து அனுப்பினார். ஆனால் லாரி ஓட்டுநர் செல்வம் 29 டன் இரும்பு தகடு ஏற்றிவந்த லாரியுடன் மாயமானார்.

புகாரின் பேரின் தனிப்படை அமைத்து விசாரித்த போலீசார், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். செங்குற்றத்தை சேர்ந்த மணல் வியாபாரி சந்தோஷ் குமார், பிச்சாண்டி, சுரேஷ் குமார் மற்றும் திருவேற்காடு பகுதியை சேர்ந்த பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினரும், ஆர்.எஸ்.எஸ். நிர்வாகியுமான பாரதிராஜா உள்ளிட்ட 4 பேரை கைது செய்தனர். 35 லட்சம் மதிப்புள்ள 29 டன் இரும்பு தகடுகளை கைப்பற்றினர். 4 பேர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: