×

24 இன்று 4வது டி20 தொடரை வெல்ல இந்தியா முனைப்பு

போர்ட் லாடர்ஹில்: இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 4வது டி20 போட்டி, லாடர்ஹில் மைதானத்தில் இன்று இரவு 8.00 மணிக்கு தொடங்குகிறது. வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி மொத்தம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் 3 போட்டிகள் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்ற நிலையில், கடைசி 2 போட்டிகள் அமெரிக்காவின் புளோரிடா மாகாணம் லாடர்ஹில் நகரில் நடக்கின்றன. இரு அணி வீரர்களுக்கும் விசா கிடைப்பதில் இழுபறி நீடித்ததால் இந்த போட்டிகள் திட்டமிட்டபடி நடப்பதில் சிக்கல் ஏற்பட்டது.

நீண்ட காத்திருப்புக்குப் பின்னர் அனைவருக்கும் விசா வழங்கப்பட்டதை அடுத்து 4வது போட்டி இன்று இரவு 8.00 மணிக்கு தொடங்கி நடக்கிறது. 3 போட்டிகளின் முடிவில் 2-1 என முன்னிலை வகிக்கும் இந்தியா, இன்றைய போட்டியில் வென்று தொடரை கைப்பற்றும் முனைப்புடன் களமிறங்குகிறது. காயம் காரணமாக அவதிப்பட்ட கேப்டன் ரோகித், முழு உடல்தகுதியுடன் களமிறங்கத் தயாராகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சூரியகுமார், ஹூடா, பன்ட் நல்ல பார்மில் உள்ள நிலையில் ஷ்ரேயாஸ் கணிசமாக ர குவிக்க வேண்டிய நெருக்கடியில் உள்ளார். முன்னிலையை அதிகரித்து தொடரை கைப்பற்ற இந்தியாவும், 2-2 என சமன் செய்ய வெஸ்ட் இண்டீசும் வரிந்துகட்டுவதால், ஆட்டத்தில் அனல் பறப்பது உறுதி.


Tags : 24 ,India ,T20 , T20 series, India v West Indies
× RELATED காமன்வெல்த் மகளிர் டி20: அரையிறுதியில் இந்தியா