×

நீட் தேர்வில் தொடர் தோல்வி மாணவர் தீக்குளித்து தற்கொலை

ஆண்டிபட்டி: தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே டி.சுப்புலாபுரம் பகுதியை சேர்ந்த ஸ்ரீதர் மகன் மணிராஜ்(24). மருத்துவ படிப்பு படிக்க வேண்டும் என்ற ஆசையில் 3 முறை தொடர்ந்து நீட் தேர்வு எழுதினார். மூன்றிலும் தோல்வி அடைந்தார். இதுதவிர மற்ற அரசு போட்டி தேர்வுகளையும் எழுதியுள்ளார். ஆனால் நீட் தேர்வில் தோல்வியடைந்ததால், பல முயற்சிகள் செய்தும் மருத்துவ படிப்பு படிக்க முடியவில்லையே என்ற ஏக்கத்திலேயே இருந்து வந்துள்ளார்.

இதையடுத்து தந்தை ஸ்ரீதர், மணிராஜை பொறியியல் கல்லூரி, தமிழ்நாடு அரசு வேளாண்மை பல்கலைகழகம் மற்றும் கலை மற்றும் அறிவியல் கல்லூரி என தொடர்ந்து பல கல்லூரிகளிலும் சேர்த்தார். ஆனாலும், மணிராஜால் படிப்பை தொடர முடியவில்லை. மருத்துவ படிப்பை படிக்க முடியாத விரக்தியில் மணிராஜ், மனநிலை பாதிக்கப்பட்டதாகவும், கடந்த மாதம் 25ம் தேதி டி.சுப்புலாபுரம் கிராமத்தில் உள்ள நாழிமலை அடிவாரத்தில்உடலில் பெட்ரோலை ஊற்றி தீக்குளித்தாகவும் கூறப்படுகிறது. அப்பகுதியினர் அவரை மீட்டு மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு கடந்த 3ம் தேதி இரவு அவர் உயிரிழந்தார்.

Tags : NEET exam, continuous failure, student commits suicide
× RELATED நீட் தேர்வு தோல்வி பயத்தில் மாணவி தற்கொலை முயற்சி