×

கத்திமுனையில் பணம் பறித்த 2 பேர் கைது

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே செம்பேடு பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் குமார் (31) கடந்த 3ம் தேதி இரவு பாடியநல்லூரில் இருந்து தேர்வாய் செல்லும் சாலையில் லாரியில் லோடு ஏற்றி வந்து கொண்டிருந்தார். அப்போது 2 மர்ம நபர்கள் லாரியை வழிமறித்தனர். டிரைவர் குமாரை கத்திமுனையில் மிரட்டி, அவர் வைத்திருந்த ரூ. 13 ஆயிரம் ரொக்கப் பணத்தை பறித்துக்கொண்டு தப்பி சென்றனர்.

இப்புகாரின்பேரில் பாதிரிவேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இதைத் தொடர்ந்து, லாரி டிரைவரிடம் கத்திமுனையில் பணம் பறித்த தேர்வாய் கிராமத்தை சேர்ந்த விஜயகுமார் (22), ஈசா (எ) வெங்கடேசன் (28) ஆகிய இருவரையும் நேற்றுமுன்தினம் மாலை மடக்கி பிடித்தனர். இருவரையும் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags : Kathimuna , 2 people arrested for extorting money in Kathimuna
× RELATED கொடைக்கானல் சாலை துண்டிப்பு...