×

குமரி மீனவர்கள் 8 பேரை மீட்க தூதரக ரீதியில் நடவடிக்கை தேவை: ஒன்றிய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: குமரி மீனவர்கள் 8 பேரை மீட்க தூதரக ரீதியில் நடவடிக்கை தேவை என ஒன்றிய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

ஓமன் நாட்டில் சிக்கித்தவிக்கும் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 8 மீனவர்களை மீட்க தூதரக அளவிலான நடவடிக்கைகளை விரைவுபடுத்தக்கோரி ஒன்றிய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

ஓமன் நாட்டின் மஸ்கட் நகரில் மீன்பிடித் தொழிலுக்கு சென்ற கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 8 மீனவர்களின் விசா காலாவதியானதாலும், ஓமன் நாட்டவரால் அவர்களுக்கு ஊதிய நிலுவைத் தொகை வழங்கப்படாததாலும் தயக்கம் திரும்ப முடியாமல் சிக்கித்தவிக்கும் மீனவர்களின் அவநிலையை குறிப்பிட்டு அவர்களை மஸ்கட்டிலிருந்து திருப்பி அனுப்புவதற்கான ஏற்பாடுகளை விரைவுபடுத்த தூதரக அளவில் தேவையான அனைத்து உதவிகளை வழங்கிட நடவடிக்கை எடுக்குமாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒன்றிய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

Tags : Embassy ,Union Foreign Minister ,Jaishankar ,Chief Minister ,BSE K. Stalin , Diplomatic action needed to rescue 8 Kumari fishermen: Chief Minister M.K.Stal's letter to Union External Affairs Minister Jaishankar
× RELATED கம்போடியா சென்றடைந்தார் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்