×

காமன்வெல்த் போட்டியில் இந்திய வீரர்கள் அசத்தல்: பாரா பளுதூக்குதலில் தங்கம்; நீளம் தாண்டுதலில் வெள்ளி.. 7வது இடத்திற்கு முன்னேறியது இந்தியா!!

பர்மிங்காம்: காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் பாரா பளுதூக்குதலில் தங்கம் வென்று இந்தியாவின் சுதிர் அசத்தியுள்ளார். இதன் மூலம் பதக்கப்பட்டியலில் இந்தியா 7வது இடத்தில் உள்ளது. 22வது காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் இங்கிலாந்து நாட்டின் பர்மிங்காமில் கடந்த 28ம் தேதி தொடங்கியது. 72 நாடுகளில் இருந்து 5000 விளையாட்டு வீரர்கள் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர். இந்தியாவிலிருந்து மொத்தம் 19 பிரிவுகளில் 141 போட்டிகளில் 215 விளையாட்டு வீரர்களும் வீராங்கனைகளும் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில், ஆடவருக்கான பாரா பளுதூக்குதல் விளையாட்டில் ஹெவிவெயிட் பிரிவில் 212 கிலோ எடையைத் தூக்கிய  இந்தியாவின் சுதிர் சிங் முதலிடம் பிடித்து, காமன்வெல்த் போட்டியில் சாதனை படைத்து தங்கம் வென்றார். நைஜீரியர் வீரரை விட 0-9 புள்ளிகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். இதுவரை இந்தியா 8வது முறையாக தங்கம் வென்றுள்ளது. மேலும் 7 வெள்ளி, 7 வெண்கலப் பதக்கங்களுடன் மொத்தம் 22 பதக்கங்களை இந்திய அணி வென்றுள்ளது. இந்த வெற்றியைக் கொண்டாட லண்டனில் நன்கு சுற்றப் போகிறேன். ஆசிய விளையாட்டுப் போட்டி, 2024 ஒலிம்பிக்ஸ் என இரு முக்கியப் போட்டிகளிலும் தங்கம் வெல்ல முயல்வேன் என்று சுதிர் பேட்டியளித்தார்.

மேலும், காமன்வெல்த் வரலாற்றில் முதல் முறையாக நீளம் தாண்டுதல் போட்டியில் இந்தியாவிற்கு பதக்கம் கிடைத்துள்ளது. நேற்று நடைபெற்ற நீளம் தாண்டுதல் இறுதிப் போட்டியில் இந்தியாவை சேர்ந்த முரளி ஸ்ரீசங்கர் கலந்துகொண்டார். இறுதிப் போட்டியில் ஸ்ரீசங்கர் தனது முதல் முயற்சியில் 7.60மீ. தூரமும், அடுத்த இரண்டு முயற்சிகளில் 7.84 மீ தூரமும், ஐந்தாவது முயற்சியில் 8.08 மீட்டர் தூரமும் நீளம் தாண்டி இரண்டாமிடம் பிடித்தார். இதேபிரிவில், கரிபியன் தீவுகளைச் சார்ந்த பஹாமாஸ் நாட்டின் லகுவான் நைர்ன் தங்கப் பதக்கம் வென்றார். இவரும் 8.08 மீட்டர் தூரமும் நீளம் தாண்டி இருந்தார் என்றாலும், இரண்டாவது முயற்சியில் ஸ்ரீசங்கரை விட அதிக தூரம் (7.98 மீ) நீளம் தாண்டியதால் தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார். காமன்வெல்த் வரலாற்றில் ஆண்கள் நீளம் தாண்டுதலில் கிடைக்கும் முதல் பதக்கம் இதுவாகும். மேலும், காமன்வெல்த் நீளம் தாண்டுதலில் வெள்ளிப்பதக்கம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமையை ஸ்ரீ சங்கர் முரளி பெற்றார்.

Tags : Commonwealth Games ,India , Commonwealth, India, Para Weightlifting, Gold, Long Jump, Silver, India
× RELATED காமன்வெல்த் விளையாட்டு நடை போட்டியில் இந்தியாவுக்கு வெண்கலம்