சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலையில் இன்று மாற்றமில்லை..ஒரு சவரன் ரூ.38,920-க்கு விற்பனை..!!

சென்னை: தங்கம் விலை கடந்த சில மாதமாக ஏற்றம், இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. கடந்த மாதம் முதல் தேதியிலேயே, ஒன்றிய அரசு தங்கத்திற்கான இறக்குமதி வரியை உயர்ந்ததை தொடர்ந்து, தங்கம் விலையும் ராக்கெட் வீக்கத்தில் உயர்ந்து விற்பனை செய்யப்பட்டது. இதனால் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1000 வரை அதிகரித்தது. அதன் பிறகு தங்கத்தின் விலை குறைவதும், பின் உயர்வதுமாக இருந்து வருகிறது. கடந்த சில வாரங்களாக நகை விலை குறைக்கப்பட்டாலும், அடுத்த சில நாட்களே குறைக்கப்பட்ட விலையை விட இருமடங்கு விலையேற்றம் அடைந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இம்மாத தொடக்கத்திலேயே தங்கத்தின் விலையானது சவரனுக்கு 160 குறைந்து, ஒரு சவரன் ரூ.38,360-க்கும், ஒரு கிராம் ரூ.20 குறைந்து, ரூ.4,795-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதனால் நகை வாங்க மக்கள் சற்று ஆர்வம் காட்டினர். ஆனால் அதற்கு மறுநாள், சற்றும் எதிர்பாராத வகையில் தங்கத்தின் விலை திடீர் உச்சம் அடைந்தது. இந்நிலையில் இன்று காலை நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலையில் எவ்வித மாற்றமுமின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதவாது சவரனுக்கு ரூ.38,920-க்கும், கிராமானது ரூ.4,865-க்கும் விற்கப்படுகிறது.

சென்னையில் வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.20 காசுகள் உயர்ந்து, ரூ.63.60-க்கும், ஒரு கிலோ 63,600-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் நகை வாங்க மக்கள் சற்று தயக்கம் காட்டும் சூழ்நிலையும் உருவாகியுள்ளது. அண்மைக்காலமாக தங்கம் விலை எதிர்பாராத வகையில் சற்று தாறுமாறான ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருவதனால் சாதாரண மக்கள் முதல் நகைப்பிரியர்கள் வரை பெரும் கலக்கம் அடைந்துள்ளனர். அந்த வகையில் இன்று தங்கத்தின் விலை சற்றும் மாறாமல் அதே விலையில் விற்பனை செய்யப்படுவது மக்களை ஏமாற்றமடைய செய்துள்ளது.

Related Stories: