காங்கிரசில் நீக்கப்பட்ட குல்தீப் பிஸ்னோய் பாஜ.வுக்கு தாவல்

புதுடெல்லி அரியானாவில் காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட குல்தீப் பிஸ்னோய், தனது மனைவியுடன் பாஜவில் இணைந்தார். அரியானாவில் கடந்த ஜூனில் நந்த மாநிலங்களவை தேர்தலில், காங்கிரஸ் எம்எல்ஏ குல்தீப் பிஸ்னோய், பாஜ கூட்டணி கட்சியின் வேட்பாளருக்கு கட்சி மாறி வாக்களித்தார். இதனால், கட்சியில் இருந்து அவர் நீக்கப்பட்டார். இவர் 2 முறை எம்பி.யாகவும், 4 முறை எம்எல்ஏ.வாகவும் இருந்தவர். இவரது மனைவியும் முன்னாள் எம்எல்ஏ. இந்நிலையில், தனது ஆதம்பூர் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ பதவியை நேற்று முன்தினம் இவர் ராஜினாமா செய்தார். நேற்று தனது மனைவியுடன் சென்று பாஜ.வில் சேர்ந்தார். முதல்வர் மனோகர் லால் கட்டார், ஒன்றிய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்  முன்னிலையில் அவர் இணைந்தார்.

Related Stories: