ஊராட்சிமன்ற தலைவர் படுகொலை: முத்தரசன் கண்டனம்

சென்னை: ஊராட்சிமன்ற தலைவர் படுகொலைக்கு இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: கிருஷ்ணகிரி மாவட்டம், தளி ஒன்றியத்தின் தாளவேந்திரம் ஊராட்சியின் தலைவர் மூர்த்தி நேற்று முன் தினம் இரவு, கோரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார். சமூகவிரோதிகளின் கோழைத்தனமான தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறோம். இந்தப் படுகொலை சம்பவத்தில் தொடர்புடைய, இதற்கு துணை போன அனைவரையும் உடனடியாக கைது செய்து, சட்டத்தின் சந்து, பொந்துகளில் தப்பி விடாமல் தண்டிக்கும் வகையில் காவல்துறையினர் உறுதியான உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துவதுடன், உயிரிழந்த ஊராட்சி தலைவர் மூர்த்தியின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.

Related Stories: